திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு குறைந்துள்ளதால் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வாய்க்கால், குளம், ஏரிகள் ஆகியவற்றிற்கு மழைநீரை சேமிக்கும் வழிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் அனைத்து வீடுகள் கடைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு அமைப்பதற்கான விழிப்புணர்வையும் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.
தண்ணீரை பாதுகாப்போம் ஆட்சியர் முன் உறுதிமொழி ஏற்பு - Tiruvannamalai
திருவண்ணாமலை: ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கம் குறித்த மகளிர் சுய உதவிக் குழுவினரின் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்கள், நீரை பாதுகாப்பது பற்றி உறுதி மொழி ஏற்றனர்.
அதன் ஒருபகுதியாக ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கம் குறித்த மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கொடியசைத்து தொடக்கி வைத்தார். திருவண்ணாமலை ஈசானிய மைதானத்திலிருந்து நகராட்சி பேருந்து நிலையம், பெரியார் சிலை வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் அரசு அலுவலர்கள் , மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரணியில் பங்கு பெற்ற அனைவரும் நீரை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். மேலும், நீர் மேலாண்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் மகளிர் குழுவினர் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.