திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தேசிய நீர் இயக்கம் சார்பாக நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தழுவல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தோ ஜெர்மன் கார்ப்பரேஷன் திட்டத்தின்கீழ் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பழனிச்சாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2020ஆம் ஆண்டிற்கான சுகாதார கையேட்டினை வெளியிட்டு பேசிய அவர், "திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் முக்கிய நோக்கம் மழைநீர் சேமித்தல், பாதுகாத்தல், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும் பல்வேறு துறைகளுடன் சேர்ந்து செயல்படுத்தப்படுகிறது" என்றார்.