தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம்: வேட்பாளர்களின் பெயர் பொருத்தும் பணி தொடக்கம் - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர்

திருவண்ணாமலை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

EVM
EVM

By

Published : Mar 29, 2021, 9:34 PM IST

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 400 வாக்குச்சாவடி மையங்களுக்கு 480 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 524 விவிபேட் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பேலட் யூனிட்டில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குத் தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிவேல் முன்னிலையில் நடைபெற்றது.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி அந்தந்த தாலுகா அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம், வேட்பாளர்கள் பெயர் பொருத்தப்பட்ட பின்னர் மாதிரி வாக்குப்பதிவு சரியான முறையில் செயல்படுகிறதா எனச் சோதனை செய்யப்பட்டு இயந்திரங்களுக்குச் சீல்வைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details