தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் முப்பரிமாண விநாயகர் சிலை !

திருவண்ணாமலை: விநாயகர் சதுர்த்திக்கான சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

vinayagar statue making in thiruvanamalai

By

Published : Aug 27, 2019, 9:57 AM IST

விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பாண்டிச்சேரியில் இருந்து வந்த சிற்பக் கலைஞர்களால் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசாங்கம் விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கு சில விதிமுறைகள் விதித்துள்ளது. அந்த விதிமுறைகளின் அடிப்படையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டினைப் போல இந்த ஆண்டும் காகிதத்தாலான கூழ், இயற்கை மூலிகை வண்ணங்கள் கொண்டு விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது.

குறிப்பாக இந்த ஆண்டு முப்பரிமாண விநாயகர் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை அடி முதல் 15 அடி அளவிலான விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது. இங்கு பக்தர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப குறைந்த விலையிலான விநாயகர் சிலைகள் உள்ளன. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒருவாரமே இருப்பதால் சிலை செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details