தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காளைவிடும் விழாவுக்கு அனுமதி மறுத்ததால் நாய்கள்விடும் விழாவை நடத்திய கிராம மக்கள்! - Jallikattu

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள காட்டுநல்லூர் கிராமத்தில், காளைவிடும் விழாவுக்கு அனுமதி வழங்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து அவ்வூர் மக்கள் நாய்கள் விடும் விழாவை நடத்தினர்.

நாய்கள் விடும் திருவிழாவை நடத்தி கிராம மக்கள்
நாய்கள் விடும் திருவிழாவை நடத்தி கிராம மக்கள்

By

Published : Mar 8, 2021, 3:30 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செங்கம், போளுர் உள்ளிட்ட தொகுதிகளில் மாவட்ட அளவில் காளைவிடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், மாவட்ட நிர்வாகமானது காளை விடும் திருவிழாவிற்கு அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் ஓரு சில இடங்களில் தடையை மீறி காளைவிடும் திருவிழா நடைபெற்றது.

காளைவிடும் விழாவிற்கு அனுமதிகோரி இதுவரை பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் காட்டுகாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மனுகொடுத்துள்ளனர். இருப்பினும், மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

நாய்கள் விடும் திருவிழாவை நடத்தி கிராம மக்கள்

இதனால், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காட்டுகாநல்லூர் கிராமத்தில் நூதன முறையில் நாய்கள் விடும் திருவிழா நடைபெற்றன. இதில், சுமார் 50க்கும் மேற்பட்ட நாய்கள் வரவழைக்கபட்டு, காளைவிடும் திருவிழாவை போல் வாடிவாசல் அமைத்து நாய்கள் விடும் திருவிழாவை அவ்வூர் மக்கள் நடத்தினார்கள்.

இதில் வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசு அளிப்பதாகவும் துண்டு பிரசுரத்தை விநியோகம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வந்த கண்ணமங்கல காவல்துறையினர் உடனடியாக இந்தவிழாவை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கடைகளுக்கு குட்கா விநியோகித்தவர் கைது: 700 கிலோ குட்கா பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details