தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசுக்கு "நோ" - வவ்வாலை பாதுகாத்து வரும் கிராமத்து மக்கள் - வவ்வாலை இக்கிராமத்து மக்கள் பாதுகாத்து வருகின்றனர்

திருவண்ணாமலை அருகே மூன்று தலைமுறைகளாக ஆலமரத்தில் வாழ்ந்து வரும் 500க்கும் மேற்பட்ட வவ்வால்களுக்காக தீபாவளி பண்டிகை, கோவில் திருவிழாக்களிலும் பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

திருவண்ணாமலை அருகே வவ்வாலை பாதுகாத்து வரும் கிராமத்து மக்கள்
திருவண்ணாமலை அருகே வவ்வாலை பாதுகாத்து வரும் கிராமத்து மக்கள்

By

Published : Oct 22, 2022, 6:23 PM IST

திருவண்ணாமலை: அருகே இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேடந்தவாடி கிராமத்தை அடுத்த வி.பி. குப்பம் இந்த பகுதியில் மூன்று தலைமுறைக்கு முன்பு வளர்ந்த ஆலமரத்தில் 500க்கும் மேற்பட்ட வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. இவ்வவ்வால்களை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

பழமை வாய்ந்த இந்த ஆலமரத்து அடியில் காளியம்மன் கோவில் இருப்பதால், இங்கு வரும் பக்தர்கள் வவ்வால்களை தொந்தரவு செய்வதில்லை. மேலும் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் தீபாவளியின் போது பட்டாசுகள் வெடித்தால் அது வவ்வாலுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அப்பகுதியில் தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதை தவிர்த்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

மேலும் கோவில் திருவிழாக்களிலும் பட்டாசுகள் வெடிப்பதில்லை. எனவே இப்பகுதிக்கு வவ்வாலை வேட்டையாட வருபவர்களையும் தடுத்து வவ்வாலை இக்கிராமத்து மக்கள் பாதுகாத்து வருகின்றனர். சீனாவில் பரவிய கரோனா வைரஸ் வவ்வால்களில் இருந்து பரவியது என்று கூறப்பட்டாலும் இங்குள்ள வவ்வால்களால் எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை என தெரிவிக்கும் மக்கள் இதனை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகின்றனர்.

திருவண்ணாமலை அருகே வவ்வாலை பாதுகாத்து வரும் கிராமத்து மக்கள்

ABOUT THE AUTHOR

...view details