தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயணியை தள்ளிவிட்ட அரசு பேருந்து நடத்துனர் - வைரலாகும் வீடியோ! - Tiruvannamalai news

திருவண்ணாமலையில் மது போதையில் பேருந்தில் நபரை நடத்துனர் தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுப்பிரியரை அரசு பேருந்து நடத்துனர் தள்ளிவிடும் வைரல் வீடியோ
மதுப்பிரியரை அரசு பேருந்து நடத்துனர் தள்ளிவிடும் வைரல் வீடியோ

By

Published : Nov 19, 2022, 4:33 PM IST

Updated : Nov 19, 2022, 4:49 PM IST

திருவண்ணாமலை: வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் பேருந்தில் இருந்த நபரை, நடத்துனர் பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி வழியாக சேலம் செல்லும் அரசு பேருந்து ஒன்று, நேற்று இரவு வந்தவாசி பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தது. அப்பொழுது பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கினர். அதே பேருந்தில் மது அருந்திவிட்டு ஒரு நபர் பயணம் செய்துள்ளார்.

அந்த நபர் பேருந்தில் இருந்து இறங்காமல் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அரசு பேருந்து நடத்துனர் மது போதையில் இருந்த அந்த நபரை பேருந்தின் படிக்கட்டில் இருந்து தள்ளிவிட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, நடத்துனரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

மதுப்பிரியரை அரசு பேருந்து நடத்துனர் தள்ளிவிடும் வைரல் வீடியோ

இதையும் படிங்க:Video Leak:'மினிமம் பேலன்ஸ் கூட இல்ல.. உனக்கு எதுக்கு ஏடிஎம் கார்டு'

Last Updated : Nov 19, 2022, 4:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details