திருவண்ணாமலை:வேட்டவலத்தில் அரிமா சங்கத்தின் சார்பில் 1500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளின் போதைப்பொருள் பயன்பாடு தடுத்தல் விழிப்புணர்வு பேரணியை இன்று (ஆக.18) சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வேட்டவலம் காந்தி சிலை முன் ஆரம்பித்த இப்பேரணியில் மாணவர்கள் போதைப்பொருள் குறித்தும், போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதைப்பொருள் தடுப்பு குறித்தும் முழக்கங்களை எழுப்பினர்.