- சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டால் அவர்களை பெற்றோரே படுகொலை செய்யும் அவலம் தொடர்வதைக் கண்டித்தும்,
- சாதிய ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்றக் கோரியும்,
- சாதிய ஆணவ படுகொலை செய்யும் கூலிப்படை கும்பல்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும்,
- தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தின்போது மேட்ரிமோனி என்ற பெயரில் இயங்கிவரும் திருமணத்தகவல் மையங்களை தடை செய்யக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.