திருவண்ணாமலை மாவட்டம் கிளிப்பட்டு வட்டம் குன்னமுறிஞ்சி கிராமத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த, கே பன்னீர்செல்வம் (36), ஸ்டாலின் என்கிற ஏழுமலை (35) ஆகிய இரண்டு பேரும் மின் கோபுரங்கள் அமைத்ததற்கு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி மின் கோபுரத்தின் மீது ஏறி சுமார் இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உயர்மின் கோபுரத்தில் ஏறிய இரு நபர்கள் - திருவண்ணாமலையில் பரபரப்பு! - திருவண்ணாமலை
திருவண்ணாமலை: குன்னமுறிஞ்சி கிராமத்தில் உரிய நிவாரணம் வழங்கக்கோரி உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி இரு நபர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
![உயர்மின் கோபுரத்தில் ஏறிய இரு நபர்கள் - திருவண்ணாமலையில் பரபரப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3593543-thumbnail-3x2-protest.jpg)
tower
இதையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வனிதா, துணை ஆணையர்கள் அண்ணாதுரை, பழனி உள்ளிட்ட காவல்துறையினர் அங்கு சென்று அவர்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கீழே இறங்கிய அவர்களை காவல்துறையினர் கண்டித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.