திருவண்ணாமலையில் வாகனம் மோதி 3 பேர் உயிரிழப்பு - திருவண்ணாமலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பேர் பலி
திருவண்ணாமலை:இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூன்று பேர் பலியான விபத்து குறித்து தண்டராம்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
3dead in tiruvannamalai road accident
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த திருவடத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் காலித், ஷாயிர் மற்றும் சாயித். இவர்கள் 3 பேரும் திருவண்ணாமலையில் இருந்து நள்ளிரவு தங்களது கிராமத்திற்கு ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேல்செட்டிப்பட்டு அருகில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியதில் காலித், ஷாயிர் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்நிலையில்,மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தாகித்தும் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தண்டராம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.