திருவண்ணாமலைக்குகார்த்திகை தீபத் திருநாள் அன்று வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பேருந்து வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாகவும்; நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புகழ்பெற்றது, கார்த்திகை தீபத்திருவிழா.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ஆம் தேதி அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் டிச.6ஆம் தேதி அதிகாலையில் அண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபமும், மாலை ஆறு மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.
இதைக் காண்பதற்காக சுமார் 40 லட்சத்துக்கு மேலான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரும் நிலையில் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித்தரும் வகையில் அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் இன்று (நவ.14) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், கார்த்திகை தீபத்துக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அதேபோல, இந்த ஆண்டும் 2,000 நபர்களுக்கு முதலில் வரும் நபர்களுக்கு முன்னுரிமை அளித்து மலைமீது ஏற அனுமதி என்றும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவித்தார்.
திருக்கார்த்திகை: முதல் 2,000 பேருக்கு திருவண்ணாமலையில் ஏற அனுமதி இதையும் படிங்க: கோயில்களில் சிறப்பு தரிசனக்கட்டணத்தை ரத்து செய்க - திருவாவடுதுறை ஆதீனம்