திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சீருடையில் இருக்கும் ஒரு மாணவரை, மற்ற இரு மாணவர்கள் சரமாரியாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதியில் விசாரித்த போது, பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வது என்பது தொடர்கதையாகி வருவதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம் தெரிவித்தார். மேலும், வருங்காலங்களில் இதுபோன்று மாணவர்களிடையே பிரச்சனை ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.