திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அருகே உள்ள கஸ்தம்பாடி கல்குவாரி குட்டையில் 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று (செப் 4) குளிக்க சென்றுள்ளனர். அப்போது வடமாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த +2 படிக்கும் மாணவன் சக்திவேல், கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் லோமிநாதன் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து களம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஆரணி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு - Thiruvannamalai district news
ஆரணி கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
![ஆரணி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு Etv Bharatஆரணி குட்டையில் மூழ்கிய இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16279779-thumbnail-3x2-a.jpg)
Etv Bharatஆரணி குட்டையில் மூழ்கிய இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு
அதனடிப்படையில் களம்பூர் போலீசார் தீயணைப்புத்துறை அலுவலர்களுடன் விரைந்து இருவரது உடல்களையும் மீட்டுஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:சென்னை துறைமுகத்தில் 9 டன் ஃபார்மா கெமிக்கல் மாயம்