திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே திதாண்டப்பட்டு, கிளையூர் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றுவருவதாகக் காவல் துறை துணைக் கண்காணிப்பாளருக்குப் புகார் வந்தது.
இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் சின்னராஜ் உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆய்வாளர் கோமதி தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு, கிளையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், குமாரசாமிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் சாராயம் விற்றுக்கொண்டிருப்பதை உறுதிசெய்த காவல் துறையினர் அவர்களைக் கைதுசெய்தனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர் மேலும், அவர்களிடமிருந்து 50 லிட்டர் சாராயத்தையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல்செய்தனர். இதையடுத்து அங்கிருந்த 500 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் அழித்தனர்.
இதையும் படிங்க: வேலூரில் 500 லிட்டர் கள்ளச்சாராயம், 3000 லிட்டர் ஊறல் அழிப்பு