திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வயலாமூர் கிராமத்தில் தெள்ளார் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அல்லிராணி தலைமையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்களை மடக்கி சோதனை செய்ததில் அனுமதியின்றி 1000 ஜெலட்டின் குச்சிகளையும், 950 டெட்டனேட்டர்களையும் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மேலும் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வந்தவாசி அடுத்த ராயனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரையும், செங்கம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனும் பொன்னூர் கிராமத்தில் தனியார் குடோனில் இருந்து அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகளையும், டெட்டனேட்டர்களையும் கடத்திக்கொண்டு விழுப்புரம் நாட்டார்மங்கலம் பகுதிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.