தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்! - தமிழ் விபத்து செய்திகள்

திருவண்ணாமலை: பழைய அரசு மருத்துவமனை அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Two killed in two-wheeler collision with truck One injured!
Two killed in two-wheeler collision with truck One injured!

By

Published : Jul 28, 2020, 4:30 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் கோட்டாங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் சசிக்குமார்(32), மனவிருத்தாள் (52), சத்யா(48). இவர்கள் 3 பேரும் கீழ்நாச்சிபட்டு கிராமத்திலுள்ள ஈஷா நர்சரி கார்டனில் கூலி வேலை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம்போல் மூவரும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போது, பழைய அரசு மருத்துவமனை முன்பு திடீரென மாடு குறுக்கிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாகனத்தை ஓட்டிவந்த சசிக்குமார் ஒதுங்க முயற்சித்துள்ளார்.

அச்சமயம் குஜராத்திலிருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின் பக்கத்தில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மனவிருத்தாள், சத்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த சசிக்குமார் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த திருவண்ணாமலை நகர காவல்துறையினர், சரக்கு லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகன விபத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details