திருவண்ணாமலை:கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, சுப்பிரமணி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (ஜூன் 20) இரவு மது அருந்திவிட்டு குடிபோதையில் மீன்பிடிப்பதற்காக கொட்டையூர் கிராமம் அருகே உள்ள ஏரிக்குச் சென்றுள்ளனர். அப்போது ஏரிக்கரை ஓரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு. இவர்களுடைய லுங்கி, சட்டை, காலணி உள்ளிட்டவற்றை அங்கேயே கழட்டி வைத்துவிட்டு செல்போனையும் இருசக்கர வாகனத்தின் மேல் வைத்துவிட்டு இருவரும் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
பின்னர் நேற்று காலை வரை மீன் பிடிக்க சென்ற இருவரும் திரும்பி வீட்டுக்கு திரும்பாததால். அப்பகுதி மக்கள், காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்களும், காவல் துறையினரும் ஏரியில் மீன் பிடிக்க சென்று வீடு திரும்பாத ஏழுமலை மற்றும் சுப்பிரமணி ஆகியோரை ஏரியில் பரிசல் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முழுவதும் தேடியும் இருவரின் உடலும் கிடைக்காததால் தேடுதல் பணியை நிருத்தி விட்டுத் திரும்பி சென்றனர். இந்நிலையில், இருவரின் உடலும் ஏரியில் மிதப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல் துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவலல் அளித்துள்ளனர். அத்தகவிலின் அடிப்படையில் இருவரின் உடலையும் மீட்டு, காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.