திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் திலீப்குமார் (35), நவீன் (24) என்ற இருவரும் கத்தியைக் காட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் - குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - chain snatchers arrested in thiruvannamalai
திருவண்ணாமலை: சேத்துப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த இருவரை, காவல் துறை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்தனர்.
வழிபறிச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக திலீப்குமார் மீது ஆறு வழக்குகளும், நவீன் மீது இரண்டு வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி.பி.சக்கரவர்த்தி பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி இரண்டு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில், வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:'வழிப்பறி சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன' - எர்ணாவூர் நாராயணன்