தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை(யார்) கோயிலில் தரிசனம் - thiruvanamalai

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கூடுதல் கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம்
அண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம்

By

Published : Jul 24, 2021, 7:45 PM IST

திருவண்ணாமலை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

கூடுதல் தடுப்பூசிகள்

அப்போது, மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் 52 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த மாதம் 70 லட்சம் தடுப்பூசி ஒதுக்கப்பட்ட போதிலும், அதை விட அதிக எண்ணிக்கையில் தடுப்பு ஊசி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுகவினர் தடுப்பூசி மையங்களுக்கு சென்று டோக்கன்களைப் பெற்று வேண்டியவர்களுக்கு வினியோகிப்பதாகவும், அதன் காரணமாகவே அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் அவர் கூறினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என கூறிய திமுக, விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

இதையும் படிங்க : குழந்தைகளுக்கு செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசி!

ABOUT THE AUTHOR

...view details