திருவண்ணாமலை பகுதியில் உள்ள, பட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவர் முருகன். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு செல்ல பயன்படுத்தி வந்த பாதையை, அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவர் பாதையை மறைத்து, பட்டா நிலம் என்று சொல்லி மிரட்டி வந்து உள்ளார். தற்போது தான் பயிரிட்ட பயிர் நிலத்தில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்தும், அறுவடை இயந்திரம் செல்வதற்கு வழி இல்லாததால், தன்னால் அறுவடை செய்ய இயலவில்லை, என்று முருகன் கூறினார்.
இதுகுறித்து வெங்கடேசனிடம் அரசு அதிகாரிகள் கூறிய பிறகும் வழிவிடாமல் பல்வேறு விதத்தில் மிரட்டி வந்துள்ளார். எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முருகன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.