தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக-பாஜக கூட்டணியை அன்புமணி பாணியில் கலாய்த்த டிடிவி தினகரன்! - அதிமுக கூட்டணி

திருவண்ணாமலை: "அதிமுக-பாஜக கூட்டணியை அன்புமணி பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அது மானம் கெட்டக் கூட்டணி" என்று, அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கிண்டல் அடித்தார்.

தினகரன் பரப்புரை

By

Published : Apr 14, 2019, 11:57 PM IST

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பெரும் திரளாக கூடி இருந்த தொண்டர்களிடையே டிடிவி தினகரன் பேசியதாவது,

மெகா கூட்டணி வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். அன்புமணி பாணியில் சொல்ல வேண்டும் என்றால், அது மானம் கெட்டக் கூட்டணி. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது பணத்துக்காக பேயாக அலைந்து அவர் செய்த கெடுபிடியால் ஒரு அதிகாரியை, தன்னைத்தானே ரயிலில் பாய்ந்து மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு போய் அம்மா அவர்களால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவரெல்லாம் வெற்றி பெற்று விட்டால் என்ன ஆகும் எல்லா அதிகாரிகளும் பஸ்சிலும் ரயிலிலும்தான் போய் விழ வேண்டுமே தவிர வேறுவழியில்லை. அவர்களுக்கு அந்த வாய்ப்பை நீங்கள் கொடுக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.

டிடிவி தினகரன் பரப்புரை

கடந்த 15 ஆண்டு காலமாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக, பிஜேபி கூட்டணியில் 5 ஆண்டுகாலம், காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டு காலம் என தங்களுடைய தேவைகளை கவனித்துக் கொண்டு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. திமுக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் காவிரி மேலாண்மை ஆணையத்தை தாங்கள் பிரதமராக வந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை கலைப்போம் என்று சொல்கிறார்கள். உச்சநீதிமன்றம் எட்டு வழி சாலை நிறுத்தி வைக்க ஆணையிட்டுள்ளது. ஆனால் முதலமைச்சர் வைத்துக்கொண்டு இந்த எட்டு வழி சாலை நிறைவேற்றியே தீருவோம் என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும், என்றார்.

ABOUT THE AUTHOR

...view details