திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் சுவரைத் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து, கொள்ளையடித்த நகைகளை கையில் வைத்திருந்ததால் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற இரண்டு நபர்களில் மணிகண்டன் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் சுரேஷ் என்பவர் தப்பி ஓடியுள்ளார்.