தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள்..! - இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

சாதி சான்றிதழ் கோரி திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இரண்டாவது நாளாக பழங்குடியின மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் மக்கள்..!
சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் மக்கள்..!

By

Published : Jul 5, 2022, 6:13 PM IST

திருவண்ணாமலை: இதுதொடர்பாக 2015 ஆம் ஆண்டு பழங்குடியின ஆய்வு மையத்தின் குழு தலைவர் பாலடா தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு அதன் ஆய்வறிக்கை 2019ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இயக்குனராகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் முன்னிலையில் தங்களின் கலாச்சாரத்தை காண்பித்தும் கணினி மூலம் குருமன்ஸ் பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தும், இன்று வரை ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என குருமன்ஸ் இன மக்கள் தெரிவித்தனர்.

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் மக்கள்..!

மேலும் சாதிச் சான்றிதழ் வழங்க கோரி திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை இரண்டாவது நாளாக தொடர் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் குருமன்ஸ் இன மக்கள் கூறினர்.

தொடர் போராட்டத்தை அடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர்கள் குவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:பழங்குடியினர் சாதிச்சான்று கிடைக்காததால் முதியவர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details