தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது, வாக்கு எண்ணும் பணிகளுக்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு! - TN election 2021
திருவண்ணாமலை: வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
வாக்கு என்னும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அம்மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் துணைப் பதிவாளர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, வங்கி, தபால் துறைகளின் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர் .