திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையிலிருந்து ஆறு பேர் கொண்ட கும்பல் செம்மரம் வெட்டுவதற்காக ஆந்திரா பகுதிக்கு வாகனத்தில் வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக ஜமனாமுத்தூர் காவல் துறையினர் பீமன் பால்ஸ் கூட்டுச்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை காவல் துறையினர் மறித்தனர். அப்போது வாகனத்தில் இருந்தவர்கள் காவல் துறையினரைப் பார்த்துவிட்டு வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர். பின்னர் காவல் துறையினர் வனப்பகுதிக்குச் சென்று தப்பிச்சென்ற ஆறு பேரையும் கைது செய்தனர்.