தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலை எரித்து போராட்டம்! - தொழிலாளர் சட்டத் திருத்த தொகுப்பு

திருவண்ணாமலை:தொழிலாளர் சட்டத்திருத்த தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலை எரித்து போராட்டம்
தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலை எரித்து போராட்டம்

By

Published : Feb 4, 2021, 11:23 AM IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு, ஏஐடியுசி, எல்.பி.எஃப், எச்.எம்.எஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள நான்கு தொழிலாளர் சட்டத்திருத்த தொகுப்புகளை திரும்பப் பெறக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொழிலாளர் சட்டத்திருத்த தொகுப்பு நகல்களை தீயிட்டு எரித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:சேலத்தில் மேடை நடனக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details