தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் இன்று ஒரே நாளில் 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி - கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

திருவண்ணாமலை: மாவட்டத்தில் இன்று (ஜூன்27) ஒரே நாளில் 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

By

Published : Jun 27, 2020, 5:53 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூன் 26) வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,492 ஆக இருந்த நிலையில், இன்று (ஜூன்27) புதிதாக 127 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,619 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (ஜூன் 26) வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 615 ஆக உள்ளது.

பெங்களூருவில் இருந்து வந்த 13 பேர், சென்னையில் இருந்து வந்த ஏழு பேர், கோயம்புத்தூர், டெல்லி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து வந்த தலா ஒருவர், குஜராத்தில் இருந்து வந்த மூன்று பேர், காஞ்சிபுரத்தில் இருந்து வந்த இரண்டு பேர், மருத்துவப் பணியாளர்கள் மூன்று பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்த 39 பேர், நோயாளியிடம் தொடர்பில் இருந்த 43 பேர், இரண்டாம் கட்ட தோற்று பெற்ற ஏழு பேர் உள்ளிட்ட மொத்தம் 127 பேருக்கு இன்று நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கரோனா வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து, நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், பொதுமக்கள் ஒருவிதமான அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றனர். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details