தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 5, 2020, 2:08 AM IST

ETV Bharat / state

மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்ககூடாது- மின்துறை ஊழியர்கள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை: மின் வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என தமிழ்நாடு மின்துறை அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

General Committee Meeting
மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்ககூடாது'- மின்துறை ஊழியர்கள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஹரிஹரன் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மின்துறை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் திருவண்ணாமலை வட்டத்தின் தொழிலாளர்கள் கலந்துகொண்ட பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது.

வட்டத் தலைவர் கே. சாமுவேல் பொதுக்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

மாநில துணைச் செயலாளர் எல்லப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் மாநில தலைவர், "கஜா புயல், வர்தா புயல் போன்ற பல்வேறு இயற்கைச் சீற்றங்களின்போது தமிழ்நாடு மின்துறை அனைத்து தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணிகளில் சிறப்பாக செயலாற்றியபோது, மின்துறை அமைச்சர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

தற்போது, தொழிலாளர்கள் தனியார் கம்பெனி மூலம் வேலை செய்கிறார்கள் என்று ஏற்கெனவே கூறியதை மாற்றி பேசுகிறார். அமைச்சர், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு குத்தகைக்கு விடுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

கூட்டத்தில், தனியாருக்கு மின்வாரியத்தை தாரை வார்க்ககூடாது, திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆரணி மின் பகிர்மான வட்டம் தொடங்கப்படவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க:தி.மலையில் 230 லிட்டர் கள்ளச்சாராயம், 178 மதுபாட்டில்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details