திருவண்ணாமலை: கர்நாடக மாநிலத்தில் உள்ள மார்க்கண்டேய நதியின் குறுக்கே, யார்கேள் அணையை அம்மாநில அரசு கட்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யார்கோள் அணையால், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேகதாது அணையைக் கட்டக் கூடாது என வலியுறுத்தியும் போராட்டம் நடந்தது.