தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடி பேசியது காட்டுமிராண்டித்தனம் - கே.எஸ்.அழகிரி - TN CONGRESS PRESIDENT KS ALAGIRI

திருவண்ணாமலை: பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சித்து பேசியிருப்பது காட்டுமிராண்டித்தனமானது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி

By

Published : May 6, 2019, 10:27 PM IST

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செங்கம் குமார் தலைமையில் இன்று மே தின விழா பொதுக்கூட்டம் அண்ணா நுழைவு வாயில் அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி, 'இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது. தற்போது மூன்று எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி

மேலும், இது ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற தலைகுனிவு அல்ல, இது தமிழகத்திற்கே ஏற்பட்டிருக்கிற தலைகுனிவு என தெரிவித்தார். பின்னர், 'மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒன்னாம் நம்பர் ஊழல் பேர்வழி என்று அநாகரிகமாக மோடி பேசி இருப்பது ஒரு காட்டுமிராண்டித்தனமானது. இன்றைக்கு அவர் ஒரு டீ விற்பனை செய்பவரை விட கீழ்த்தரமாக பேசியுள்ளார். எனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பிரதமர் மோடியின் அநாகரீகமான பேச்சை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்' என்று அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details