திருவண்ணாமலை மாவட்டத்தில் வருமான வரித்துறை ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பட்டயக் கணக்காளருக்கான கருத்தரங்கம் ராமகிருஷ்ணா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் வருமான வரித்துறை ஆணையத்தின் ஆணையர் தாஸ் அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அறக்கட்டளை நிர்வாகிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருமான வரித்துறை ஆணையம் என்பது வருமான வரித்துறை சோதனை செய்தது மட்டுமல்லாமல் அனைவருக்கும் சேவை செய்ய இருக்கும் ஆணையமே என்று கூறினார். அறக்கட்டளை நிர்வாகி நோக்கம் நல்லதாக உண்மையானதாக நேர்மையானதாக இருந்தால் கண்டிப்பாக அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். மாறாக வரி ஏய்ப்பு செய்வதற்கான அறக்கட்டளை நடத்துவதாக இருந்தால் சட்டம் அனைவருக்கும் சமமானது சட்டத்தின் படிதான் நடத்த முடியும் என்று தெரிவித்தார்.