திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் கோடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் உள்ளூர் பகுதியில் விளைந்த காய்கறிகள், உணவு பண்டங்கள், கலை நிகழச்சிகள் ஆகியவை இடம்பெறும். இதை காண சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாமல் பல வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்த்து செல்வர்.
ஜவ்வாது மலையில் களைக்கட்டியது கோடை விழா..! - களைக்கட்டியது
திருவண்ணாமலை: ஜவ்வாது மலையில் தொடங்கிய 22ஆவது கோடை விழாவை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
அதன்படி இந்தாண்டிற்கான 22ஆவது கோடை விழா இன்று தொடங்கியது. விழாவை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், சேவூர் ராமசந்திரன், எம்.சி சம்பத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேலும், விளையாட்டுத் துறை, தோட்டக்கலைத் துறை சார்பில் விளையாட்டு போட்டிகள், காய்கறிகள் கண்காட்சியும் நடத்தப்பட்டது. இதனால் விழா களைக்கட்டியது. இன்றும், நாளையும் விழா நடைபெறுவதால், மக்கள் வந்து பங்கேற்க வசதியாக போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.