தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலை தெப்ப உற்சவம்! - Tiruvannamalai Karthikai Festival

திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்ப உற்சவம் விழா தொடங்கியது.

tvm
tvm

By

Published : Dec 1, 2020, 7:56 AM IST

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் உள்ள உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து அன்று மாலை 6 மணியளவில் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின்மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

தொடந்து நேற்று (நவ. 30) இரவு தெப்ப உற்சவ விழா தொடங்கியது. இந்தத் தெப்ப உற்சவ விழா தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெறும். முதல் நாளான நேற்று ஸ்ரீ சந்திரசேகரர் தெப்ப உற்சவத்தில் பவனி வந்தார். இரவு 9 மணியளவில் திருவண்ணாமலை, அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து பிரம்ம தீர்த்தத்தில் மூன்று முறை பவனி வந்தார்.

திருவண்ணாமலை தெப்பத் திருவிழா
தெப்ப உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் அய்யங்குளத்தில் தான் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக, முதல்முறையாக அண்ணாமலையார் கோயில் வாளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details