தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு; ஐயங்குளத்தில் தெப்பலில் சந்திரசேகரர் உற்சவம் - திருவண்ணாமலை மகா தீபம்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்திலுள்ள ஐயங்குளத்தில் மின்னொளியில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

tiruvannamalai
theppal-urchavam

By

Published : Dec 13, 2019, 9:28 AM IST

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றப்பட்டதை அடுத்து, தீபத்திருவிழா நிறைவடைந்தது. இருப்பினும் பௌர்ணமி, மகா தீபத்திற்கு அடுத்த நாள் வந்ததை ஒட்டி கிரிவலம் செல்ல நேற்றிரவு ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடைந்ததும், அடுத்த மூன்று நாட்கள் தெப்பல் திருவிழா நடைபெறுவது வழக்கம். முதல்நாள் தெப்பத் திருவிழாவில் சந்திரசேகரர் அலங்கார வடிவத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து, அருள் பாலித்தார்.

தெப்பல் உற்சவம் நடைபெற்றதை ஒட்டி ஐயங்குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தது. கூடுதல் காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

ஐயங்குளத்தில் தெப்பலில் சந்திரசேகரர் உற்சவம்

ஐயங்குளத்தைச் சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மின்னொளியால் ஐயங்குளம் முழுவதும் ஜொலித்தது.

இதையும் படிக்க: இயற்கை அன்னைக்கு என்ன தரப்போகிறோம்?

ABOUT THE AUTHOR

...view details