திருவண்ணாமலை : பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம் திருவிழா நடைபெற்று வருகிறது ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாகு மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு ரிஷப வாகன அலங்காரம் செய்யப்பட்டது.