திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி - திண்டிவனம் சாலையில் உள்ள ஸ்ரீ ஜெய்சக்தி காளியம்மன் ஆலயத்தில் இன்று (ஜூலை 31) ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் 10 ரூபாய் நோட்டு முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வரை மொத்தம் 19 லட்சம் ரூபாய் நோட்டுக்கள் கொண்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதற்காக பக்தர்கள் கொடுத்த ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு, இந்த சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூன்றாம் நாள் அலங்காரம் முடிந்தவுடன் ரூபாய்களை பக்தர்களுக்கு திருப்பி வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து கொண்டு வந்து சமூக இடைவெளியுடன் அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
ஆடி வெள்ளிக்கிழமை: 19 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களில் அம்மனுக்கு அலங்காரம் - திருவண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
திருவண்ணாமலை: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீ ஜெய் சக்தி காளியம்மன் ஆலயத்தில், 19 லட்சம் ரூபாய் நோட்டுக்கள் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
TAGGED:
Tiruvannamalai special pujas