தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக விரோதிகளால் தாக்கப்பட்ட சஞ்சீவிராயர் திருக்கோயில் - திருவண்ணாமலை நகர காவல்துறையினர் விசாரணை

திருவண்ணாமலை: பழமைவாய்ந்த சஞ்சீவிராயர் திருக்கோயில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு அங்குள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட திருவண்ணாமலை சஞ்சீவிராயர் கோயில்

By

Published : Sep 28, 2019, 10:40 AM IST

திருவண்ணாமலை ஐயங்குள வடமேற்கு கரையில் மிகவும் பழமைவாய்ந்த சஞ்சீவிராயர் கோயில் அமைந்துள்ளது. நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் சன்னதியின் கதவை கற்களால் உடைத்து கோயில் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் கோயிலுக்குள் இருந்த சிலைகளைத் தாக்கிவிட்டு அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கொள்ளையர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் காவல் துறைக்கு புகார் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் இது சம்பந்தமாக தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details