திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு ஆயிரத்து 797 ஆக இருந்தது.
தி.மலையில் இன்று 115 பேருக்கு கோவிட் - 19 பாதிப்பு உறுதி! - tn covid 19 news
திருவண்ணாமலை: இன்று ஒரே நாளில் மட்டும் 115 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு ஆயிரத்து 912 ஆக உயர்ந்துள்ளது.
![தி.மலையில் இன்று 115 பேருக்கு கோவிட் - 19 பாதிப்பு உறுதி! hospital](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8467501-929-8467501-1597759884586.jpg)
hospital
இந்நிலையில், இன்று (ஆக.18) புதிதாக 115 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு ஆயிரத்து 912 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிழக்கு ஆரணி, நாவல்பாக்கம், ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம், ஆக்கூர், வந்தவாசி, பெருங்கட்டூர், போளூர், காட்டாம்பூண்டி, தச்சூர், செங்கம், சேத்பட், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட சுகாதார வட்டத்தைச் சேர்ந்த 115 பேருக்கு இன்று நோய்தொற்று பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை மருத்துவமனை உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:அதிகரிக்கும் கரோனா பரவல்: புதுச்சேரியில் முழு ஊரடங்கு!