தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலையில் 133 பேருக்கு கரோனா உறுதி

By

Published : Aug 13, 2020, 10:49 PM IST

திருவண்ணாமலை: ஒரே நாளில் 133 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருவண்ணாமலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 412ஆக உயர்ந்துள்ளது.

thermal scan
thermal scan

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 133 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 412ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனா தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 293ஆக உள்ளது. சிகிச்சைப் பலனின்றி 106 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திரா, ஒடிஸா, விழுப்புரம், வேலூர் பகுதிகளிலிருந்து வந்த தலா ஒருவர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 53 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 37 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற ஆறு பேர், முன்களப் பணியாளர் ஐந்து பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 28 பேர் உள்ளிட்ட 133 பேருக்கு இன்று (ஆகஸ்ட் 13) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மருத்துவமனை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:'பிளாஸ்மா தானம் செய்ய இந்திய சுகாதார அமைப்பு ஒப்புதல்' - அமைச்சர் விஜயபாஸ்கர்!

ABOUT THE AUTHOR

...view details