தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தலில் வாக்களிக்காததால் ஆத்திரம்: வீடுகளில் வேட்பாளர் கல்வீசி தாக்குதல்

திருவண்ணாமலை: தேர்தலில் வாக்களிக்காததால் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடுகளில் கல்வீசி வேட்பாளர் தாக்குதல்
வீடுகளில் கல்வீசி வேட்பாளர் தாக்குதல்

By

Published : Jan 5, 2020, 1:51 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புளியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்ட பூசை என்பவர் 100 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

பணம் பெற்றுக்கொண்டு ஊர் மக்கள் தோற்கடித்துவிட்டதாக பூசை, அவருடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து புளியம்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் கற்களை வீசியும், மதுபாட்டில்களை உடைத்தும், பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியும் உள்ளனர்.

வீடுகளில் வேட்பாளர் கல்வீசி தாக்குதல்

சுயேச்சை வேட்பாளர் பூசை மீது ஆத்திரமடைந்த கிராம மக்கள் செங்கம் - இளங்குண்ணி சாலையில் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டுவருவதை அறிந்த மேல்செங்கம் காவல் ஆய்வாளர் மலர் சம்பவ இடத்திற்க்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் பூசை, அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த பின்னர் சாலை மறியலை கிராம மக்கள் கைவிட்டு கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: ‘96’ பட பாணியில் ஒன்றுகூடி மகிழ்ந்த பழைய மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details