தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 15, 2020, 2:52 PM IST

ETV Bharat / state

ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்த ஊராட்சித் தலைவர்

திருவண்ணாமலை: பொது மக்களுக்கு அவசர காலத்தின்போது துரித சேவையை வழங்குவதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவையை ஊராட்சித் தலைவர் தொடங்கிவைத்தார்.

ambulance service by Panchayat leader
108 ambulance service

வேங்கிக்கால் ஊராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருவதாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ளதாலும் மக்களின் அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு அதிக கால தாமதம் ஏற்படுகின்றது.

இதனால் ஊராட்சி நிர்வாகிகள் ஆலோசனை செய்து தனியாக ஒரு ஆம்புலன்ஸை ஊராட்சிக்காக நிறுத்துவது என்று முடிவெடுத்து ஊராட்சி மன்ற கட்டடத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை இன்று முதல் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

துவக்க நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:அலட்சியம்! ஆறு கோடியை எட்டும் அபராத தொகை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details