திருவண்ணாமலை:வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல நமது உரிமையும் கூட. நமது நாடு தனது அங்கீகாரத்தைப் பெற்று செழுமை மிக்க பயணத்தை தொடங்கி பல ஆண்டுகள் கடந்தபோதிலும், அதன் நிறைவான பாதையில் பயணிப்பதற்கு தனது வாக்கு சதவீதத்தை இன்னும் 100 சதவீதமாக முழுமையாக்கவில்லை.
எனவே 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் விதமாக, வித்தியாசமான விழிப்புணர்வு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருவண்ணாமலை அடுத்த லாடவரம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், காகித மடிப்பு கலை மூலம் வாக்காளர் விழிப்புணர்வு ஓவியத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் வரைந்தனர்.