தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்த்திகை தீபத்திற்காக கொப்பரையைச் செப்பனிடும் பணிகள் தீவிரம் - when is tiruvannamalai karthigai deepam

திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2019ஆம் ஆண்டிற்கான தீப கொப்பரைப் பழுது பார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொப்பரை

By

Published : Nov 22, 2019, 12:52 PM IST

அக்னி தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழாவான, மகா தீபம் வருகிற டிசம்பர் மாதம் 10ஆம் திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதற்காக தீபம் ஏற்றப்பயன்படும் கொப்பரை பழுது பார்க்கப்பட்டு, தயார்படுத்தப்பட்டு வருகிறது.

முக்தி தரும் திருத்தலம் என்று கூறப்படும் அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற நவம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அண்ணாமலையார் கோயிலில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி உலகப் பிரசித்தி பெற்ற கார்த்திகைத் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு இரண்டாயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார்மலை மீது மகா தீபம் ஏற்றப்படும் போது, சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று விண்ணை பிளக்கும் அளவிற்கு பக்தியுடன் கோஷங்கள் எழுப்புவர்.

இன்று மகாதீப கொப்பரை புதுப்பிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியில் தீப நாட்டார் என்று அழைக்கப்படுகின்ற பர்வதகுல ராஜ மரபினர் வம்சத்தினரான மண்ணு நாட்டார் குடும்பத்தினர், பாரம்பரியமாக மகா தீப கொப்பரையை புதுப்பிக்கும் பணியை இலவசமாக செய்து வருகின்றார்கள்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலைமீது ஏற்றப்படும் கொப்பரை முழுவதும் செம்பு தகட்டால் ஆனது. கொப்பரையின் உயரம் 5 அடி, மொத்த எடை 170 கிலோ. இந்த செம்பு கொப்பரை 2 பாகங்களைக் கொண்டது. இந்த கொப்பரையின் மேல் சுற்றளவு 120 அங்குலம், கீழ் சுற்றளவு 90 அங்குலம், மேல் விட்டம் 3.25 அடி, கீழ் விட்டம் 2.5 அடி. மேலும் இந்த கொப்பரையில் 6 செம்பு வளையங்கள் இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை தீபத்திற்காக கொப்பரை செப்பனிடும் பணிகள் தீவிரம்!

மேலும் படிக்க: ஆந்திராவில் ஒரு ஷாஜகான்; காதலிக்கு கோயில் கட்டிய இளைஞர்...!

ABOUT THE AUTHOR

...view details