தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணமலை ஈஸ்வரர் கோயில் 108 சங்காபிஷேகம்

திருவண்ணாமலை ஸ்ரீ சதுர்வேத சோமநாத ஈஸ்வர ஆலயத்தில் கார்த்திகை மாதம் சோமவாரம் முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணமலை ஈஸ்வரர் கோயில் 108 சங்காபிஷேகம்
திருவண்ணமலை ஈஸ்வரர் கோயில் 108 சங்காபிஷேகம்

By

Published : Nov 29, 2022, 7:28 AM IST

திருவண்ணாமலை: மங்கலம் ஸ்ரீ சதுர்வேத சோமநாத ஈஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, திங்கட்கிழமையான நேற்று ஈஸ்வரர் ஆலய பிரகாரத்தில், பழமை வாய்ந்த 108 சங்குகளில் புண்ணிய தீர்த்தங்களை ஊற்றி சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க 108 சங்குகளுக்கும் விசேஷ பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரதான சங்குகள் மற்றும் 108 சங்குகளில் இருக்கும் அந்த புனித நீரை, மூலவரான சதுர்வேத சோமநாத ஈஸ்வரருக்கு ’ஓம் நமோ பகவதே சோமநாத ஈஸ்வரர்’ என வேத மந்திரங்கள் முழங்க சங்குகளில் இருக்கும் புனித நீரை சதுர்வேத சோமநாதர் சாமிகளின் திருமேனியில் ஊற்றி மகா அபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணமலை ஈஸ்வரர் கோயில் 108 சங்காபிஷேகம்

கார்த்திகை மாதத்தில் நடைபெறும் சங்கு அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சங்காபிஷேகத்தை பார்க்கும் பக்தர்களுக்கு தங்கள் குடும்பத்திலுள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும் மற்றும் திருமண தடை, கடன் நிவர்த்தி, கண்திருஷ்டி, தீராத நோய்கள் தீரும் மற்றும் எதிரிகளால் இருந்து வரும் ஆபத்து விலகும் என்பது ஐதீகம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க:பிபின்ராவத் நினைவை போற்றும் வகையில் 150 கிலோவில் செய்யப்பட்ட ஐம்பொன் சிலை!!

ABOUT THE AUTHOR

...view details