தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐந்து மணி நேரமாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழை! - கனமழை

ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர் நிலைகளில் தண்ணீர் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

tiruvannamalai heavy railnfall
tiruvannamalai heavy railnfall

By

Published : Sep 30, 2020, 7:06 AM IST

திருவண்ணாமலை: ஐந்து மணி நேரமாகத் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருவண்ணாமலை நகரமும், அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆவூர், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், சோமாசிபாடி, மல்லவாடி, மங்கலம், துரிஞ்சாபுரம், ஊசாம்பாடி, நம்மியந்தல், இனாம்காரியத்தல், ஆண்டாபட்டு, சாணார்பாளையம், சேரியந்தல், நொச்சிமலை, வாணியந்தாங்கல், அரசம்பட்டு, நாச்சிப்பட்டு, மலப்பாம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பரவலாகத் தொடர்ந்து கனமழை பெய்தது.

இதனால் சாலைகளின் இரு பக்கங்களிலும் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். நீர் நிலைகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரி, குளம், குட்டை ஆகியவற்றில் தண்ணீரின் இருப்பு அளவு உயர்ந்து வருகிறது.

இம்மாவட்ட மக்கள், விவசாயத்தைப் பெரும்பாலும் நம்பி வாழக்கூடியவர்கள். கரும்பு, நெல், வேர்க்கடலை, பூ, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை அதிகளவு விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். விவசாயப் பாசன தண்ணீர் தேவைக்கு ஆறுகள் இல்லாத நிலையில் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் உருவாகியுள்ள குளிர்ச்சியான சூழல், அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details