திருவண்ணாமலை செங்கம் சாலையில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்துடன், சோல் ஃப்ரி (Soul free) என்ற தொண்டு நிறுவனம் இணைந்து முதுகெலும்பு மறுவாழ்வு மையம் அமைக்க உள்ளது. முதல்கட்டமாக ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் அதன் ஒருங்கிணைந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்தார்.
திருவண்ணாமலையில் இந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம், முதுகு தண்டுவடம் பாதித்தவர்களுக்கு குறுகிய காலம் தங்கும் மையமாக அமைக்கப்படுகிறது.
மேலும் மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட நபர்கள் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்தவர்களின் உதவியுடன்தான் எந்த பணியையும் செய்ய முடியும். இந்த மையம் மூலம் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் படுக்கைப் புண்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளுடன் முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சோல் ஃப்ரீ தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரீத்தி சீனிவாசன், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்க: வெளிநாடுகளிலுள்ள நம் சித்த மருத்துவக் குறிப்புகளை மீட்டெடுங்கள்!