வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரை ஏற்றிவந்த லாரி, செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிலிண்டர்கள் அனைத்தும் குடியிருப்பு பகுதியில் சரிந்ததால், அப்பகுதி மக்கள் சிலிண்டர் வெடித்துவிடும் என்கிற அச்சத்தில் விபத்தில் சிக்கிய ஓட்டுநரை மீட்க தயக்கம் காட்டினர்.
பின்னர் செங்கம் காவல் துறையினருக்கு விபத்து குறித்து தகவலளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் விபத்தில் சிக்கிய ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.