திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்செங்கம் பகுதி ஜவ்வாது மலையை ஒட்டி அமைந்துள்ளதால் அரிய வகை மான், காட்டெருமை, கரடி, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் ஏராளமாக வாழ்கின்றன.
இதனால் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் உள்ள விளைபொருட்களை உண்பதற்காகவும் குடிநீர் தேடியும் கூட்டம் கூட்டமாக மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வருவது வாடிக்கையாகி வருகிறது. வீட்டின் பின்புறம் படுத்திருந்த புள்ளிமான் இந்நிலையில் மேல்செங்கம் குடியிருப்புப் பகுதிகளில் அழகிய புள்ளிமான் ஒன்று புகுந்ததால் பொதுமக்கள் அதனை விரட்டியதில் சாமுவேல் என்பரது வீட்டில் நுழைந்தது. தொடர்ந்து அதனை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிய பின், வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். பின்னர் விரைந்து வந்த வனத்துறையினர், புள்ளிமானை பத்திரமாக மீட்டு மேல்செங்கம் வனக்காட்டில் விட்டனர். புள்ளிமானைக் காண குவிந்த மக்கள் வனவிலங்குகள் பெரும்பாலும் குடிநீர் தேடி ஊருக்குள் நுழைவதால் காட்டுக்குள்ளேயே வனத்துறையினர் தண்ணீர் குட்டை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதையும் படிக்க:கோவையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு... விசாரணை அமைக்க கோரிக்கை