திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில், கர்நாடக அரசு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டிவரும் அணைதிட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி அடைந்த அதிமுக அரசைக் கண்டித்து அண்ணா சிலை முன்பு இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலு தலைமை தாங்கினார். இதில், தென்னைபெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையாக வாதாடவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், இந்த மிகப்பெரிய அணை கட்டப்பட்டால் கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், விழுப்புரம் மற்றும திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். விவசாய நிலங்களுக்கு பாசன நீர் கிடைக்காது.
திருவண்ணாமலையில் திமுக கண்டன ஆர்பாட்டம் எனவே, தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது குப்பை லாரி மோதி காவலர் உயிரிழப்பு!